அமெரிக்க கடல் ஆதிக்கத்திற்கு புதிய சவாலான சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்

United States of America China
By Dharu Feb 18, 2026 05:39 AM GMT
Report

கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உற்பத்தியை வேகமாக அதிகரித்து, அமெரிக்காவை விட அதிக அளவில் புதிய கப்பல்களை கடலில் இறக்கியுள்ளது என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனம்(IISS) வெளியிட்ட புதிய அறிக்கை இதனை தெரிவிக்கிறது. இது பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு சொந்தமான கடற்படை ஆதிக்கத்திற்கு சவாலாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

IISS வெளியிட்ட “Boomtime at Bohai” என்ற தலைப்பிலான அறிக்கையின் படி, 2021 முதல் 2025 வரை சீனா 10 அணு நீர்மூழ்கிக் கப்பல்களை  கடலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதே காலத்தில் அமெரிக்கா 7 கப்பல்கள் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பெல்லோஷிப் பயிற்சியை முதன்முறையாக நடத்தும் இந்தியா

ஐக்கிய நாடுகளின் பெல்லோஷிப் பயிற்சியை முதன்முறையாக நடத்தும் இந்தியா

சீன கப்பல்கள்

2016–2020 காலத்தில் சீனா 3 கப்பல்கள் மட்டுமே சேர்த்த நிலையில், அமெரிக்கா 7 கப்பல்களை சேர்த்திருந்தது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க கடல் ஆதிக்கத்திற்கு புதிய சவாலான சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் | Chin Submarin Pose New Challenge To Us Marin Domin

IISS வெளியிட்ட “Military Balance 2025” அறிக்கையின்படி, 2025 தொடக்கத்தில் சீனாவிடம் 12 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

அவற்றில் 6 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல்கள் (SSBN) மற்றும் 6 தாக்குதல் அல்லது வழிகாட்டி ஏவுகணை கப்பல்கள் அடங்கும்.

இதற்கு மாறாக, அமெரிக்காவிடம் மொத்தம் 65 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 14 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல்கள் அடங்கும். மேலும், சீனாவிடம் 46 மரபுவழி (டீசல் இயக்கம்) நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

அமெரிக்காவிடம் இத்தகைய மரபுவழி கப்பல்கள் எதுவும் இல்லை. சீனாவின் Type 094 வகை பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடியவை.

இவை சீனாவின் அணு மூவகை பாதுகாப்பு அமைப்பில் (நிலைத்தள ICBM, குண்டுவீச்சு விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்) முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும், Type 096 வகை மேம்பட்ட SSBN கப்பல்கள் இந்த தசாப்தத்திற்குள் உற்பத்தி தொடங்கி, 2020களின் இறுதி அல்லது 2030களின் தொடக்கத்தில் சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...!

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை குறி வைத்த சர்வதேச நாடுகள்...!

அமெரிக்க தாக்குதல் கப்பல்கள்

CRS அறிக்கை கூறுவதாவது, 2030 ஆம் ஆண்டில் அமெரிக்க தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கை 47 ஆக குறையும். 2032 வரை 50 ஆக உயராது. மேலும், AUKUS ஒப்பந்தத்தின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு 3–5 Virginia வகை கப்பல்கள் விற்பனை செய்யும் திட்டமும் அமெரிக்காவின் குறுகிய கால திறனை பாதிக்கக்கூடும்.

இதன்படி சீனாவின் புதிய கப்பல்கள் தரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கப்பல்களை விட பின்தங்கியிருக்கலாம். குறிப்பாக, அமைதியான (stealth) இயங்குதிறனில் அமெரிக்காவுக்கு இன்னும் முன்னிலை உள்ளது.

ஆனால், கடற்படையில் எண்ணிக்கை அதிகமுள்ள தரப்பு பெரும்பாலும் மேலோங்கி நிற்கும் என்பதால், சீனாவின் வேகமான வளர்ச்சி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பெரிய சவாலாக மாறலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025