இராஜாங்க அமைச்சர்களின் பணியாளர்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்
Colombo
Sri Lanka
Government Of Sri Lanka
By Sumithiran
இராஜாங்க அமைச்சர்களின் ஊழியர்களுக்கான வசதிகள்
புதிதாக பதவியேற்ற இராஜாங்க அமைச்சர்களின் ஊழியர்களுக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழக் கூட முடியாத நிலையில் முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை நியமித்ததன் மூலம் நாட்டின் செலவினம் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
5 பேர் என்ற அடிப்படையில் ஊழியர்கள்
ஒரு இராஜாங்க அமைச்சருக்கு 5 பேர் என்ற அடிப்படையில் ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை தமக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

