கோட்டாபய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இலகுவாக இழக்க நேரிடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எடுத்த அதிகபட்ச எண்ணிக்கை 156 ஆகும். அதில் இப்போது 3 அமைச்சர்கள் இல்லை. அப்போது அது 153 ஆக குறைந்தது. 11 கட்சிகளில் 30 எம்.பி.க்கள் உள்ளனர். அதுவும் குறைக்கப்படும் போது 123 ஆகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்க 112 ஆசனம் இருக்க வேண்டும்.
123க்கும் 112க்கும் இடைப்பட்ட இடைவெளி 11. ஏற்கனவே 11க்கும் மேற்பட்ட ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களின் பலத்தை சரியான நேரத்தில் காட்டுவோம்.
ஆண்டு இறுதியில் பட்ஜெட் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும். பொறுமையாக காத்திருங்கள்…” என தெரிவித்தார்.
