12 மணிநேர மின்வெட்டு ஏற்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
12 மணி நேரம் மின்வெட்டு
தேவையான அளவு நிலக்கரியை இறக்குமதி செய்யாவிடின் 12 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“சமீப நாட்களாக பெய்த மழையால், மின் உற்பத்திக்கான நீர் இருப்பு உள்ளது. ஒக்டோபர் மாதத்திலேயே நிலக்கரி தேவைப்படுவதால்,தற்போது மின்வெட்டை இரண்டு மணி நேரத்துக்கு மட்டுப்படுத்தலாம். ஏனென்றால், இன்று நாம் மின்சாரம் தயாரிக்க எரிபொருளைப் பயன்படுத்துவதில்லை.
நிலக்கரி இறக்குமதி
ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை தயார் செய்ய வேண்டும்.
ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரி இறக்குமதி செய்ய முடியும். தேவையான அளவு நிலக்கரி கொண்டுவரப்படாவிட்டால் குறைந்தது 12 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி