ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதி (module) தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க இன்று (20) குறித்த உத்தரவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிறப்பித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை வெடித்தது.
விசாரணை
அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. வழக்கு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக பதவி விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |