யாழில் மாற்றியமைக்கப்பட்டுள்ள 12 வாக்களிப்பு நிலையங்கள்

Jaffna Election General Election 2024
By Shadhu Shanker Nov 12, 2024 03:56 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஊர்காவற்துறை (Kayts) தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்துக்கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் 2024: வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

பொதுத் தேர்தல் 2024: வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

மானிப்பாய் தொகுதி

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வசாவிளான் மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழில் மாற்றியமைக்கப்பட்டுள்ள 12 வாக்களிப்பு நிலையங்கள் | 12 Jaffna Polling Stations Relocated

மானிப்பாய் (Manipay) தொகுதியில் தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

உடுப்பிட்டி தொகுதி

உடுப்பிட்டி தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டித்றை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழில் மாற்றியமைக்கப்பட்டுள்ள 12 வாக்களிப்பு நிலையங்கள் | 12 Jaffna Polling Stations Relocated

நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1 இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் ஶ்ரீ வீரமா பிடாரி அம்பாள் ஆலய மண்டபத்திற்கும், நாவலர் கலாச்சார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாச்சார மண்டபத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

வாக்கெண்ணும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025