கைது செய்யப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் விடுதலை
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த மியன்தார் அகதிகளில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாதிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சட்ட விரோத குடியேற்றவாதி
இருப்பினும், இன்று (08) அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைதீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு முல்லைதீவு நோக்கி காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 115 மியன்மார் அகதிகளுடன் படகொன்று முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        