ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்
ஈரானின் ஒரே செயல்பாட்டில் உள்ள அணு மின் நிலையமான புஷேர் அணு மின் நிலையம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் நேற்று இரவு (17. 03.2026) ஒரு ஏவுகணை அல்லது எறிபொருள் ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதை ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA (International Atomic Energy Agency) உறுதிப்படுத்தியுள்ளது.
அணு மின் நிலையம்
IAEA-வின் அறிக்கையின்படி, Bushehr NPP-யின் premises-இல் projectile தாக்கியது உறுதி என்றும், ஆலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும், ஊழியர்களுக்கு காயம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

IAEA இயக்குநர் ரபேல் க்ரோஸி, இந்த மோதலின் போது அணு விபத்து ஏற்படாமல் இருக்க அதிகபட்ச கட்டுப்பாடு வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தற்போதைய அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த ஈரான் மோதலின் பின்னணியில் நடந்துள்ளது. Bushehr ஈரானின் ஒரே செயல்பாட்டு அணு மின் நிலையம் ஆகும், மேலும் IAEA ஏற்கனவே பல முறை இதுபோன்ற தாக்குதல்களால் கதிரியக்கவியல் அபாயம் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |