எதிர்காலத்திற்கு அஞ்சி விபரீத முடிவெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்
எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல் நாட்டில் கடந்த காலங்களில் 12 பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வணக்கத்திற்குரிய மல்வத்து பீடத்தின் அனுநாயக்க கலாநிதி நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இன்று கல்வி கற்கும் பிள்ளைகள் கூட பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பொருளாதார சிக்கல்கள்
"தற்போதுள்ள அமைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை.
இன்று நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. மின் கட்டணம் உள்ளிட்ட பிற பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஒரு விகாரையைக் கூட நடத்த முடியாது உள்ளது.
மதச் சடங்குகளை முறையாகச் செய்ய வழியில்லை. ஜனவரி முதல், இந்த பிரச்சினைகள் அதிகரிக்கவுள்ளன.
மக்கள் மேலும் ஆதரவற்றவர்களாக மாறி வருகின்றனர். இன்று இந்நாட்டு மக்கள் ஒரு வேளை சமைத்து காலை, மதியம், இரவு என உண்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |