அமெரிக்காவில் 12 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் (United States) 12 வயது சிறுவனொருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கார் ஒன்றில் பனிப்பந்தை வீசியமையிற்காக குறித்த சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான சிறுவனும் மற்றுமொரு சிறுவனும் விளையாடிக்கொண்டிருந்த நேரம் சிறுவர்களால் அங்கிருந்த கார் ஒன்றின் மீது பனிப்பந்து வீசப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு
இதையடுத்து, குறித்த கார் சிறுவர்களை துரத்திய நிலையில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதில் 12 வயதுடைய சிறுவன் காயமடைந்துள்ள நிலையில் மற்றுமொரு சிறுவனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய காரை காவல்துறையினர் தேடி வருகின்ற நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிபப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |