தலைநகரில் தணிந்தது பதற்றம் - வெளியானது அறிவிப்பு
colombo
people
passport
By Jaso
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்டிருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தின் ஒரு நாள் சேவையில் தினமும் 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒரு நாள் சேவைக்கான தினசரி விண்ணப்பங்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 1,000 என்றும் அந்த அதிகாரி கூறினார்.
மேலும், தலைமை அலுவலகத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 800 சாதாரண சேவை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அத்துடன் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் தற்போது சேவைகளைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி