கொழும்பில் முதல் நாளில் 125 போக்குவரத்து விதி மீறல்கள்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sathangani
கொழும்பிலுள்ள வீதிகளில் நேற்று (22) சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடித் திட்டம் நேற்று ஆரம்பமானது.
இந்நிலையில், கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
அதன்படி ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி