நெடுந்தீவு கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது
                                    
                    Indian fishermen
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Navy
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14) குறித்த 13 மீனவர்களும் 3 படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பின்பு கைது செய்யப்பட்ட  மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        