ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கூட்டங்களை அவர் நடத்தி வருவதாக மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; 'ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் உண்மையானவை. எந்த யூகமும் இல்லை.
They are discussing using nuclear weapons on Iran in strategy meetings.
— Former Congresswoman Marjorie Taylor Greene🇺🇸 (@FmrRepMTG) August 16, 2026
Yes you read that correctly. It’s real. I’m not speculating, I know.
And it’s pure evil.
The last time a nuclear weapon was used was August 6th and 9th of 1945 on two cities in Japan, Hiroshima and…
ஜப்பான் மீதான அணு ஆயுத தாக்குதலால் ஏற்பட்ட விளைவு
1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 2,14,000 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் சூழலில் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் மாபெரும் மோதல்களையும், துயரங்களையும் சந்திக்க நேரிடும். தற்போதைய தலைவர்கள் போரை உடனே நிறுத்த வேண்டும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த அரசே முழுப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |