இத்தாலியில் 770 கோடி பெறுமதியான அரிய ஓவியங்கள் திருட்டு
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அரிய ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (15.08.2026) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருந்தபோதிலும், மர்ம நபர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை முறியடித்து அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள்
அதன்பின்னர், ஓவியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் திருடப்பட்ட ஓவியங்களில் இரண்டு ஓவியங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு ஓவியங்கள் தற்போது காணாமல் போயுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்காக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்குள் எவ்வாறு நுழைந்தனர், பாதுகாப்பு மற்றும் அலாரம் அமைப்புகளை எவ்வாறு செயலிழக்கச் செய்தனர், மேலும் திருடப்பட்ட ஓவியங்களை எங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்று மற்றும் கலைத்துறை ரீதியாக மிகுந்த பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியங்கள் சர்வதேச கலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Three paintings by Renoir, Cézanne and Matisse worth millions of euros that were stolen earlier this year in a three-minute heist were recovered by Italian police — and five suspects were arrested. pic.twitter.com/LiHKuJ7Q7a
— CBS Mornings (@CBSMornings) August 15, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |