பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - வெளியான அதிர்ச்சி காணொளி..!
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளியில் வைக்கப்பட்டிருந்த குண்டே சந்தர்ப்பத்தில் வெடித்ததுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள்

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் பாகிஸ்தானில் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் தெரிக் - இ - தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் கைபர்-பக்துவா மாகாணம் பன்னு நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி அங்குள்ள அதிகாரிகளை பிணைகைதிகளாக பிடித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு செல்ல அனுமதித்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் கெடு விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#BreakingNews 2 Bomb Blast in #Khuzdar district of #Balochistan. 13 people have been injured in a bomb blast.#Khuzdar #BalochistanIsNotPakistan #Balochistan #PakistanArmy #Pakistan #PakArmy pic.twitter.com/N6MP3yLEy1
— Peoples Eye (@eye_peoples) December 19, 2022
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்