ஆப்கானிஸ்தானில் பயங்கர மோதல்! 165 தலிபான்கள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் 165 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதனால் இராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தரை வழியாகவும், வான் வழியாகவும் இராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் 165 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 85 பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த 49 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.
அத்துடன் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் நிர்மூலமாக்கப்பட்டதாக இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
