டுபாயில் கைதான 13 இலங்கையர்கள்: வெளியான காரணம்
டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச காவல்துறையினருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு
மேலும் இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொரளை பிரதேசத்திலுள்ள கடை ஒன்றில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
அந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கில் பல வழக்குப் பொருட்கள் காணாமல் போதுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, பொரளை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், கடத்தல்கள், கொலைகள் என்பவற்றுக்கு டுபாயிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |