13 வயது சிறுவனின் பாரிய திருட்டு முறியடிப்பு
13 வயது சிறுவன் கைது
வர்த்தக நிலையம் ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பண்டாரகம, நாமலுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் தாக்கி கொள்ளையிட முயற்சி
குறித்த சிறுவன் வர்த்தக நிலைய உரிமையாளரான பெண்ணை கத்தியால் தாக்கி திருட முற்பட்டபோது, வர்த்தக நிலைய உரிமையாளர் அதனைத் தடுத்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபரான சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று, மறைந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின் விளைவாக, 33 வயதான வர்த்தக நிலைய உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டன.
பல தடவைகள் கொள்ளையிட முயன்ற சிறுவன்
சந்தேகத்திற்கிடமான சிறுவன் இதற்கு முன்னரும் பல தடவைகள் வர்த்தக நிலையத்திற்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.