மட்டக்களப்பில் 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பில் (Batticaloa) தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் சிறுமியான லிங்கம் லட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
தந்தையார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயுடன் குறித்த சிறுமியும் மற்றும் அவரது இரட்டை சகோதரியும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வெளிநாட்டில் இருந்து தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளார்.
ஆடைகள்
இதன்போது, அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக தந்தையார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி சம்பவ தினமான நேற்று (27) மாலை 5.45 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதன்பின்பு, உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
