முழுமையான திருத்தம் இல்லையேல் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை!

13th amendment Parliament of Sri Lanka Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka
By Kalaimathy Jan 10, 2023 06:53 AM GMT
Report

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறிலஙகா அதிபருக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும் நிர்வாக அதிகாரங்களுக்கு ஊடாகவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தம்

முழுமையான திருத்தம் இல்லையேல் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை! | 13Th Amendment Enforcement Sri Lanka Parliament Sl

அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்றவற்றை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் இரண்டாவது கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக, 13 வது திருத்தத்தின் சில விதிகளில் உள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை உருவாக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்

முழுமையான திருத்தம் இல்லையேல் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை! | 13Th Amendment Enforcement Sri Lanka Parliament Sl

மேலும், “13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க முடியும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.

இந்த நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13வது திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்று கூறினாலும் 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர். அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஐக்கிய நாட்டிற்குள் தீர்வு

முழுமையான திருத்தம் இல்லையேல் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை! | 13Th Amendment Enforcement Sri Lanka Parliament Sl

13 வது திருத்தத்தின் ஊடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத்தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், குறித்த விவகாரம் தொடர்பாக அதிபர் மேற்கொண்டு வருகின்ற கலந்துரையாடல்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்றார். 

இந்நிலையிலேயே ரணிலிடம் அவர் மேற்கண்ட ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023