'13' தொடர்பில் பொது உடன்பாடு அவசியம் - எதிரணி வலியுறுத்து
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தம் தொடர்பில், பொது இறுதி உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற 43ஆவது படையணியின் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ இதனை விடுத்து, 1988ஆம் ஆண்டு 13இற்கு அப்பால் செல்வது, அல்லது சமஷ்டிக்கு செல்வது என்றில்லாமல், தற்போது அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள 13ஆவது அரசியலமைப்பு தொடர்பில், விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பொது உடன்பாட்டை எட்டவேண்டும்.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தம் பிரச்சினையாக்கப்பட்டால் அதன் மூலம் நாடு இன்னும் வீழ்ச்சியடையும். எனவே இந்த விடயத்தில் ஓரிணக்கத்துக்கு வரவேண்டும்” என்றார்.
