13 ஆவது திருத்தம் நடைமுறை -அமைச்சர் டக்ளஸ் முன்வைத்துள்ள யோசனை

13th amendment Eelam People's Democratic Party Douglas Devananda Ranil Wickremesinghe
By Sumithiran Jan 09, 2023 11:47 PM GMT
Report

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே, இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் உள்ள தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களால் உருவாகின்ற சிக்கல்கள் நீக்கப்படாவிடின், 13 ஆவது திருத்தச் சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. இது, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று கட்டங்கள்

13 ஆவது திருத்தம் நடைமுறை -அமைச்சர் டக்ளஸ் முன்வைத்துள்ள யோசனை | 13Th Amendment Idea Presented By Minister Douglas

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கில்,அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், இவ் விவகாரம் தொடர்பாக அதிபரால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, அதிபருக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும், நிர்வாக ஏற்பாடுகளுக் கூடாகவும் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொண்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்ற அல்லது முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலான சட்டங்களை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டதிருத்தங்களை மேற்கொள்தல் இரண்டாவது கட்டமாக தெரிவித்துள்ளார்.

மூன்றாவது கட்டமாக, 13 ஆவது திருத்தத்தின் சில விதிகளிலுள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்கள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை உருவாக்குவதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி யின் நிலைப்பாடு

13 ஆவது திருத்தம் நடைமுறை -அமைச்சர் டக்ளஸ் முன்வைத்துள்ள யோசனை | 13Th Amendment Idea Presented By Minister Douglas

மேலும், '13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்க முடியுமென்பதை ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இந்நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோமென்றும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13ஆவது திருத்தம் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லையென்று கூறினாலும், 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர், அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

13 ஆவது திருத்தத்தினூடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத் தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்து ன்று, அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்த எழுத்து மூல ஆவணத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018