13 ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஜோதிலிங்கம்
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைப்பாடு

மேலும் கருத்து தெரிவித்த அவர், “13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது .
13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல.
தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.
ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல.
எனவே 13ஆம் திருத்தச் சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது” - என குறிப்பிட்டார்.
குடிசன மதிப்பீடு

அத்துடன், தேர்தல் நடத்துவதற்கு பணம் இல்லாத அரசாங்கம் எவ்வாறு குடிசன மதிப்பீட்டினை மேற்கொள்ளும். இதற்கு அதிகளவிலான பணம் செலவழிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறான வேலைத்திட்டங்கள் இப்போது மக்களுக்கு தேவைதானா என்கிற கேள்வி எம்மிடையே எழுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.