கிளிநொச்சியில் STF - பொதுமக்கள் இடையே கடும் மோதல்: 14 பேர் கைது
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாரிய மோதல் ஏற்பட்டுள்ளது.
உமையாள்புரம் பகுதியில் நேற்று (21-06-2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையினர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த விசேட அதிரடிப்படையினர் காட்டுக்குள் உழவு இயந்திரத்துடன் ஒருவரைக் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது விசேட அதிரடிப்படையினரைக் கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள், அயலவர்கள் தாக்கியதாகவும் இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்தில் ஈடுபட்டு அனைத்துத் தரப்பினரையும் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கிளிநொச்சி நீதிமன்றில் நேற்று (21-06-2026) அவர்களை முன்னிலைப்படுத்திய நிலையில் இன்று (22-06-2026) திங்கள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |