10 வயது மாணவி பாலியல் அத்துமீறல்! பாடசாலை அதிபர் அதிரடி கைது
பண்டாரவளையின் கொஸ்லந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், 10 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், பண்டாரவளை நீதவான் ஜெமுனு சந்திரசேகர முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில், 56 வயதுடைய இந்த சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சந்தேகநபரான அதிபரால் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது, அதன்போது பாதிக்கப்பட்ட மாணவியும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் பெற்றோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபரை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |