யாழில் தந்தை கைபேசி கொடுக்காததால் தவறான முடிவெடுத்த 13 வயது சிறுவன்!
Sri Lanka Police
Jaffna
By Shadhu Shanker
7 months ago
யாழ்ப்பாணத்தில் (Jaffna) விளையாடுவதற்கு தந்தை கைபேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துநையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (15) இரவு நடைபெற்றுள்ளது.
அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தவறான முடிவெடுத்த சிறுவன்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைபேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தவறான முடிவெடுத்துள்ளான்.
அவனது சடலம் தெல்லிப்பழை (Tellippalai) ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்