வெளிநாடொன்றில் பசியுடன் பிறக்கும் மில்லியன் கணக்கான குழந்தைகள்
வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில்(pakistan) 1.4 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பிறந்ததாக 'சேவ் தி சில்ட்ரன்' (save the children)என்ற அரசு சாரா அமைப்பின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாகிஸ்தான், கடந்த ஆண்டு பசியால் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது,
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு
மேலும் நாட்டில் 20% க்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டில், உலகளவில் 21.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசியுடன் பிறந்ததாகவும், 2018 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 14.5 மில்லியனாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
அதிகரித்துள்ள பசியுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் உலகளவில் பசியுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 18.2 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பிறந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |