மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 15,000 புதிய வீட்டுக் கடன்கள் விரைவில்

Sri Lanka Prasanna Ranatunga
By Sathangani Jan 15, 2024 06:35 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வீடு திருத்த வேலைகளுக்காக இந்த வீட்டுக் கடன்கள் வழங்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்!

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்!

பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய

இதேவேளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 15,000 புதிய வீட்டுக் கடன்கள் விரைவில் | 15 000 New Home Loans Will Be Launched Soon

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முதல் வேலைத்திட்டமாக 'அனைவருக்கும் வீடு' வீடமைப்பு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கடந்த காலத்தில் பல்வேறு அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகார சபை கூறுகிறது.

உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது!

உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது!

இந்திய அரசின் நிதியுதவியில்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

இது தவிர, 94 கிராமங்களில் 2,063 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 690 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 337 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 15,000 புதிய வீட்டுக் கடன்கள் விரைவில் | 15 000 New Home Loans Will Be Launched Soon

இதன்படி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாத்தளை, கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில வீட்டுக் கிராமங்களின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழின் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழின் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை

இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1,200 மில்லியன் ரூபாவாகும். இதில் 803 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் வீடுகளுக்காக 397 மில்லியன் ரூபா பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபாவும், திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு இலட்சம் ரூபாவும் மொத்தமாக 6 இலட்சம் ரூபாவும் உதவித்தொகை மீளப் பெறாத அடிப்படையில் வழங்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 15,000 புதிய வீட்டுக் கடன்கள் விரைவில் | 15 000 New Home Loans Will Be Launched Soon

கடந்த 2020-2023 ஆகிய மூன்று ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது நாடு முழுவதும் நிர்மாணிக்க ஆரம்பித்த 37,356 வீடுகளில் 30,894 வீடுகளைப் பூரணமாக நிர்மாணித்து முடித்துள்ளது. மேலும் 6462 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் துணைத்தளபதியின் சகோதரிகளை கைது செய்தது இஸ்ரேல் படை (காணொளி)

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் துணைத்தளபதியின் சகோதரிகளை கைது செய்தது இஸ்ரேல் படை (காணொளி)

வீட்டுத் திட்டங்களுக்கான பணம்

உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை, மிஹிந்து நிவஹன, விரு சுமித்துரு, செவன மற்றும் சேவாபிமானி உட்பட 15 வீடமைப்பு உதவித் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 15,000 புதிய வீட்டுக் கடன்கள் விரைவில் | 15 000 New Home Loans Will Be Launched Soon

இந்த வீட்டுத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18717.771 மில்லியன் ஆகும். இதுவரை 17146.078 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களுக்குத் தொடர்புடைய திறைசேரி நிதி, செவன நிதி, உள்ளக உற்பத்தி மற்றும்  இந்த அதிகாரசபை ஆகியவற்றின் பெறப்பட்ட பணத்தின் மூலம் வீட்டுத் திட்டங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவிக்கின்றது.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும்! பகீர் கிளப்பிய முன்னாள் அமைச்சர்

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும்! பகீர் கிளப்பிய முன்னாள் அமைச்சர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025