உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழின் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
தழிழர் திருநாளாம் தைப்பொங்கல் மகிழ்ச்சியையும் சூரியனுக்கு நன்றியைத் தெரிவிக்கும் முகமாகவும் உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருநாளாகும்.
இயற்கை, கால்நடைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறும் நோக்கத்திற்காகவே இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
உழவர் திருநாளான இன்று உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தி தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இன்றைய தினம் தைப்பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உலக வாழ் தமிழர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழ் தைத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.
பிறந்திருக்கும் இந்த வருடம் இருளை அகற்றி அனைவரது வாழ்விலும் ஒளி வீசவும், மலர்ந்திருக்கும் இந்த நாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வுலகில் சந்தோசத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஒருங்கே தர வேண்டுமென இந்நாளில் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக ...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |