பொருளாதார விழிப்பே தைப்பொங்கல் தரும் செய்தி : நிமால் விநாயகமூர்த்தி

Thai Pongal TGTE Sri Lankan Tamils Sri Lanka
By Sathangani Jan 15, 2024 04:21 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிகு பண்டிகையான தைப்பொங்கல் பொருளாதார விழிப்பை ஏற்படுத்துகின்ற முக்கியமான நாள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார எழுச்சியின் ஊடாகவும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

ரணில் விக்ரமசிங்கவின் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

விடுதலைப் பொங்கலை கொண்டாடுபவர்கள்

மகிழ்ச்சி பொங்கட்டும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்வோடும் உணர்வோடும் அனுஷ்டிக்கின்றனர்.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனவுரிமைக்காக போராடி வருகின்ற தமிழ் ஈழ மக்களின் வாழ்வில் சூழ்ந்த ஆக்கிரமிப்பு, இனவழிப்பு இருள் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று இந்நாளில் வேண்டுகிறேன்.

பொருளாதார விழிப்பே தைப்பொங்கல் தரும் செய்தி : நிமால் விநாயகமூர்த்தி | Economic Awareness Is The Message Of Thaippongal

பொங்கல் என்பது எமதினத்தில் புரட்சியின் குறியீடாகவும் எழுச்சியின் குறியீடாகவும் முக்கியத்துவம் பெற்றமை பாரம்பரியமாகும். தமிழ் ஈழ நிலத்தில் சுதந்திரம் வேண்டி விடுதலைப் பொங்கலை கொண்டாடுபவர்கள் நாம்.

ஒவ்வொரு ஆண்டும் மலர்கின்ற போது விடுதலையின் ஆண்டாகவும் ஒவ்வொரு பொங்கலும் வருகின்ற வேளை அது விடுதலையின் பொங்கலாக அமைந்துவிடும் என்ற நம்பிக்கையிலும் அமையாதா என்ற ஏக்கத்திலும் கால யுகங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம்.

போரின் காயத்தில் இருந்து மீள முடியாமல் நீதிக்குத் தவிக்கும் ஓரினமாக இப் பூமிப் பந்தில் போராடும் தமிழ் ஈழ மக்களின் வாழ்வில் இனியேனும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

நாட்டைக் கட்டியெழுப்ப இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் : ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

நாட்டைக் கட்டியெழுப்ப இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் : ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

இயற்கையை அழித்தால் இயற்கையால் நீ அழிக்கப்படுவாய்

தமிழர் மாண்பின் நாள் உலகப் பரப்பில், உணவைப் பகிர்ந்துண்ணல், இயற்கையை வணங்குதல், விவசாயத்திற்கு மதிப்பளித்தல் என்ற மகத்துவமான பண்புகளை கொண்டவர்களாக தமிழர்கள் மிளிர்கின்றனர்.

தைப்பொங்கல் என்பதில் சூரியனை வழிபடுதல் என்ற இயற்கையைப் போற்றும் மிகப் பெரிய மாண்பை தமிழர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

பொருளாதார விழிப்பே தைப்பொங்கல் தரும் செய்தி : நிமால் விநாயகமூர்த்தி | Economic Awareness Is The Message Of Thaippongal

இயற்கையை அழித்தால் இயற்கையால் நீ அழிக்கப்படுவாய் என்ற மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையை தமிழ் இனம் காலம் காலமாக சிரம்மேற்கொண்டு வாழ்ந்துள்ளது. அத்துடன் தைப்பொங்கல் வாயிலாக பகிர்ந்துண்ணுகிற மிகப்பெரும் பண்பாடு வளர்த்தெடுக்கப்படுகின்றது.

இந்த உலகில் வாழும் மக்கள் ஒருவருடன் ஒருவர் குடும்பமாக சமூகமாக இனமாக இணைந்து வாழ்வதும் பகிர்ந்துண்பதும் கொண்டாடுவதுமான மிகப் பெரும் வாழ்வியல் செல்நெறியை தைப்பொங்கல் வழியாக நாம் நீட்டிச் செல்வது பெருமைக்கும் மகிழ்வுக்கும் உரியதாகும்.

அத்துடன் பிராணிகளை மகிழ்ந்து அவைகளை மதிக்கும் மாண்பையும் இந்நாள் வெளிப்படுத்தி நிற்பதும் எமது பண்பாட்டின் செழுமையாகும்.

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை

தற்சார்ப்புப் பொருளாதாரப் பண்பாடு

பொருளாதார எழுச்சியின் குறியீடு அத்துடன் தமிழர்கள் பொருளாதார தன்னிறைவு கொண்டவர்களாக இருந்துள்ளமையின் பண்டைய கால வெளிப்பாடாகவும் தைப்பொங்கல் அமைந்துள்ளது.

உழைப்பினதும் விளைச்சலினதும் தன்னிறைவினதும் அடையாளமாக அமைந்த பொங்கல், தமிழர்கள் மத்தியில் இருந்த தற்சார்ப்புப் பொருளாதாரப் பண்பாட்டின் குறியீடாகவும் இருக்கின்றது.

பொருளாதார விழிப்பே தைப்பொங்கல் தரும் செய்தி : நிமால் விநாயகமூர்த்தி | Economic Awareness Is The Message Of Thaippongal

தமிழீழ விடுதலைப் பேராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ நிழரசில் இத்தகைய பொருளாதார விழிப்பும் எழுச்சியுமே இலங்கை அரசின் பொருளாதார தடை என்ற யுத்த அவலத்தை உடைக்க எமக்கு துணை நின்றமை வரலாறு ஆகும்.

இக் காலகட்டத்தில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழ் ஈழத்தில் பல பொருளாதார விழிப்புக்களை ஏற்படுத்தி நடைமுறை வாழ்வில் அதன் சாதனைகளை அறுவடை செய்து தமிழீழத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்


இன்றும் இலங்கை பாரிய பொருளாதார இடருக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், இன உரிமைக்கும் நில விடுதலைக்கும் தொடர்ந்து போராடுகின்ற இனமான ஈழத் தமிழர்கள் பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவே, எமது உரிமைகளை வெல்லும் போராட்டத்தில் பலமுற பயணிக்கலாம் என்பதையும் இந் நாளில் வலியுறுத்துகிறேன்.

விழிப்போடு போராடுவோம் விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்று எம் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியதையும் இந்நாளில் சிரத்தை எடுத்துக்கொள்வோம்.

ஏனெனில் பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா பெரும் பின்னடைவுகளை சந்திக்கும் தருணத்தில் இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் உரிமை உணர்வை ஒடுக்கி, சிங்களப் பேரினவாத அரசின் நலன்களை காத்துக்கொள்ள இன்றைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடும் சூழ்ச்சிகளை பின்னி வருகிறார்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இனப்படுகொலை மற்றும் அரசியல் தீர்வு குறித்து வாய் திறக்காமல் வடக்கு பொருளதாரத்தில் வைத்திருந்த கண்ணும் சிறிலங்கா அரசு தமிழர்களின் பொருளாதாரத்தை அபகரித்து தன்னை வளர்க்க முனைவது குறித்தும் மிகுந்த விழிப்பைக் கொள்வோம் என்பதையும் வலியுறுத்தி நிற்கிறேன்” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்)

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024