ரணில் விக்ரமசிங்கவின் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

Thai Pongal Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani Jan 15, 2024 03:15 AM GMT
Report

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக 

“வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப்பொங்கல் திருநாள் குறிக்கிறது.

நாட்டைக் கட்டியெழுப்ப இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் : ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

நாட்டைக் கட்டியெழுப்ப இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் : ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

அறுவடைக் காலத்தின் ஆரம்பம்

தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தி | Ranil Wickremesinghe Thai Pongal Day Message

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும். இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி 

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ரணில் விக்ரமசிங்கவின் தைத்திருநாள் வாழ்த்துச் செய்தி | Ranil Wickremesinghe Thai Pongal Day Message

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம். அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது.

அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026