மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்!
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இந்து மற்றும் கத்தோலிக்க மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (15) தைப்பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தேவாலயங்களில் திருப்பலி
இதன்போது தேவாலயங்களில் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் இதன்போது இடம் பெற்றது.
பொருளாதார நெருக்கடி
மேலும் மன்னார் கடைவீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இருந்த போதிலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பு, வரி அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் மக்கள் வழமையிலும் பார்க்க பொங்கல் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |