மட்டக்களப்பில் 15 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்
Batticaloa
Sexual harassment
Sri Lanka Police Investigation
By Sumithiran
மட்டக்களப்பு வெல்வாவெளி காவல்துறை பிரிவில் 15 வயதுடைய தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தனர்.
18 வயது இளைஞன் கைது
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து 18 வயது இளைஞன் ஒருவரை நேற்றையதினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் கைதான இளைஞனுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி இருந்தார்.இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி