இலங்கையில் கணனிகளில் கண்டறியப்பட்ட கோடிக் கணக்கிலான உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகள்
இலங்கையில் கடந்த வருடம் (2023) கணனிகளில் ஒரு கோடியே 50 இலட்சம் (15 மில்லியன்) உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை கண்டறிந்ததுள்ளதாக உலகளவில் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான கஸ்பர்ஸ்கீ (Kaspersky) தெரிவித்துள்ளது.
இதனால் 46 சதவீத இலங்கைப் பயனர்கள் உள்ளூர் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள கஸ்பர்ஸ்கீ பயனாளர்களின் கணனிகளில் 93 இலட்சம் வெவ்வேறு இணையம் மூலம் பரவும் இணைய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்தமாக, இந்தக் காலகட்டத்தில் 39.5 சதவீத பயனர்கள் இணையத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இலங்கையில் அறிமுகம்
கஸ்பர்ஸ்கீயின் புதிய தயாரிப்பான “கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட்” (Kaspersky Next) நிறுவனத்தின் பொது முகாமையாளர் யோ சியாங் ரிஓங் (Yeo Siang Tiong) இலங்கையில் நேற்று (09) அறிமுகம் செய்து வைத்தார்.
கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகள், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் சிக்கலான தன்மை மற்றும் அவற்றின் கிடைக்கக்கூடிய மூலங்கள் மூன்று தயாரிப்பு நிலைகளில் இருந்து தெரிவு செய்ய இந்த தயாரிப்பு அனுமதிக்கிறது.
இந்த மாறுபட்ட மற்றும் அதிநவீன அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளதுடன் இணைய ஊடுருவல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும் பின்னடைவையும் கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட் மூலம் உறுதிசெய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |