உக்ரைனில் அமைச்சர், பிரதியமைச்சர் உட்பட 16 பேர் பலி - விபத்தா அல்லது யுத்தமா புலப்படாத பின்னணி!
உக்ரைன் தலைநகரில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதியமைச்சர் ஆகியோர் உட்பட 2 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது ரஷ்ய படையினரின் தாக்குதலின் விளைவா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
சம்பவம்
யுக்ரேனிய தலைநகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் குறித்த வானூர்தி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரது பிரதியமைச்சர் யெவன் யெனின் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரே பலியாகியுள்ளனர்.
முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் 10 சிறுவர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

