தீயாய் பரவும் ரணிலின் சமூக ஊடக பதிவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கைதுசெய்யப்பட்ட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட பதிவொன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
குறித்த பதிவானது, 2014.11.11 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பந்த்பட்ட பதிவில், "ஒரு அரசனுக்கு என்ன திறமை இருந்தாலும், அவரது ராஜ்ஜியத்தின் மனிதர்கள் அரசாங்கத்தின் செல்வத்தைத் திருடி வீணடித்தால், அந்த மன்னன் அந்த பதவியில் இருக்கத் தகுதியற்றவன்" என ரணில் தெரிவித்துள்ளார்.
ரணிலின் நிலைமை
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ரணில் முன்னதாக வெளிப்படுத்திய நற்சிந்தனை அவரது வாழ்விலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

