கொழும்பில் 16 மணி நேரம் நீர் வெட்டு
Colombo
Sri Lanka
By Beulah
கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (24) மாலை 5 மணி முதல் சனிக்கிழமை (25) காலை 9 மணி வரை 16 மணி நேரம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள்
மேலும், அம்பத்தல நீர் வழங்கல் மேம்படுத்தும் எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 23 மணி நேரம் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
4 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி