ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
1600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பொதுத்துறைக்கு அதிகாரம் அளித்து ஜப்பான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான
இதன்படி, ஜப்பான் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1600 மில்லியன் (3.3 பில்லியன் ரூபா) வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தப் பணம் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி உபகரணங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு
மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்துடன் பரிமாற்ற பத்திரங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |