கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக நபர் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Airport & Aviation Services
By Thulsi
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (17) அதிகாலை இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் 58 வயதான கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்