வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் : விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 164 குற்றவாளிகளை சர்வதேச காவல்துறையின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சும் இலங்கை காவல்துறையினரும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இந்த குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கஞ்சிபானை இம்ரான்
காவல்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சின் கூட்டு நடவடிக்கையின் பலனாக பாதாள உலகக் குழுவின் தலைவர்களாகக் கூறப்படும் கஞ்சிபானை இம்ரான், லொக்கு பட்டி, ரொட்டம்ப அமில உள்ளிட்ட 05 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்டனர் என உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதுங்கியிருக்கும் பாதாள உலக குற்றவாளிகள்
இதன்மூலம் டுபாய், பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாள உலக குற்றவாளிகள் விரைவில் இந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |