ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்!
2026 ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 1,68,625 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஒக்டோபர் மாதம் பதிவாகியுள்ளது.
இது 2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் பதிவான 1,65,193 என்ற எண்ணிக்கையை விட 2.08 சதவீதம் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை வருமானம்
இதனையடுத்து, 2026ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. எனினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 1.5 சதவீதம் குறைவாகும்.

ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 62,211 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது மொத்த வருகையில் 37 சதவீதமாகும்.
இதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு இராச்சியம், சீனா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிக்கவில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |