நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa Bribery Commission Sri Lanka Law and Order
By Sathangani Nov 03, 2026 05:25 AM GMT
Report

புதிய இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (03) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சற்றுமுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ச

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னிலையாவற்காகவே நாமல் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு | Namal S Bail Application To Be Announced Today

முதலாம் இணைப்பு

நாமலின் பிணை மனு : இன்று வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

கிரிஷ் கொடுக்கல் - வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனு கோரிக்கை மீதான உத்தரவு இன்று (03) வழங்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த மனு மீதான தீர்ப்பு நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.

தனது பெற்றோரின் நோய்நிலையைக் கருத்திற்கொண்டு தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி, நாமல் ராஜபக்‌ச தனது சட்டத்தரணிகள் ஊடாக பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

TIN இலக்கத்தை பெற அலைமோதும் மக்கள்: இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

TIN இலக்கத்தை பெற அலைமோதும் மக்கள்: இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

அலி சப்ரி தெரிவிப்பு

குறித்த மனு கடந்த 28 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு | Namal S Bail Application To Be Announced Today

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிச் சட்டப் பணிப்பாளர் தனுஜா பண்டார, சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்படுவதால் விசாரணை நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தார்.

அத்துடன் சந்தேகநபரின் தாயும் தந்தையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதனால் இதனை விசேட சூழ்நிலைகளாகக் கருத்திற்கொண்டு சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு நாமல் ராஜபக்‌ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

கறுப்பு ஜூலை தொடர்பான முன்மொழிவுகள்: நாடாளுமன்றில் விசேட குழு நியமனம்

கறுப்பு ஜூலை தொடர்பான முன்மொழிவுகள்: நாடாளுமன்றில் விசேட குழு நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

இந்தநிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த மனுவை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு | Namal S Bail Application To Be Announced Today

கொழும்பு, கோட்டை பகுதியில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை பன்முகத் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்காக 100 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி