தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு
தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால், வடக்கு வழித்தடத்தில் செல்லும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
குருநாகலுக்கும் மஹவவிற்கும் இடையிலான தொடருந்து பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, அவ்வழியில் தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின்படி, கொழும்பிலிருந்து வரும் தொடருந்து குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொடருந்துகள் மஹவ வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.
வான்கதவுகள்
இதற்கிடையில், நேற்று (02) பெய்த மழையின் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் திரு. எல். எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |