சீனாவின் முதலீடுகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அசீம் முனீர்: உள்நுழையும் அமெரிக்கா
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த சீன முதலீடுகளை அசீம் முனீர் உள்ளிட்ட பாகிஸ்தான் இராணுவம் இடைநடுவில் தடுத்து நிறுத்தி வருவதாக அந்நாட்டில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் கனிம வளங்கள் வெளிநாட்டு நலன்களை முன்னெடுப்பதற்கும், அமெரிக்காவை நோக்கிய பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்துத் தெரிவித்த அவர்,
சீனாவுக்கு ஏமாற்றம்
“சீனாவின் முதலீடுகளை இடைநடுவில் நிறுத்தியதன் மூலம் பாகிஸ்தான், சீனாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் சீனாவை ஏமாற்றமடையச் செய்துள்ளீர்கள். அவர்களின் முதலீடுகளை இடைநடுவில் நிறுத்தியுள்ளீர்கள்.
சீனா ஏமாற்றமடைந்தால், உலகின் ஏனைய நாடுகளும் உங்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வராது.
மேலும், சீனா விட்டுச் சென்ற இடத்தை அமெரிக்கா நிரப்பி வருவதாகவும், அமெரிக்க அதிகாரிகள் தம்மிடம் இதனை நேரடியாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இடத்தைப் பிடிப்பது யார்? அமெரிக்காதான் அந்த இடத்தைப் பிடிக்கிறது. அமெரிக்கர்களே இதனை எனக்கு முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |