உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்
உக்ரைனின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பின் மீது ரஷ்யா, இணையவழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைனும் ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பை ஹேக் செய்ததாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜெலென்ஸ்கி,
அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!
பதிலடி கொடுக்கிறோம்
“அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு மட்டுமே நாம் பதிலடி கொடுக்கிறோம். எமது மக்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தியது தெளிவான பின்னர், நாங்களும் பதிலளித்தோம்.

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனில் அவசர எச்சரிக்கை வழங்கும் கையடக்கத் தொலைபேசி செயலிகள் ஊடாக, அணுவாயுத அச்சுறுத்தல் ஏற்படவுள்ளதாகத் தெரிவிக்கும் போலியான எச்சரிக்கைகள் பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த எச்சரிக்கை கட்டமைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
திங்கட்கிழமை ரஷ்ய அதிகாரிகளும் தமது நாட்டின் அவசர எச்சரிக்கை கையடக்கத் தொலைபேசி செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவி போலியான அவசர எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளனர்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |