24 மணி நேரத்தில் ஹவுதிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 1000 தாக்குதல்கள்
கடந்த 24 மணி நேரத்தில் ஹவுதிகளுக்கு எதிராக, 951 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யேமன் அரசாங்க படைகள் தெரிவித்துள்ளன.
கூட்டங்கள், நடமாட்டங்கள், அரண்கள், துப்பாக்கிச் சூட்டு மூலங்கள், வாகனங்கள் மற்றும் விநியோக வழிகள் மீது ஆயுதப் படைகள் 951 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து X-இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அல்-ஜவ்ஃப், மாரிப் மற்றும் அல்-பைதா முனைகளிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு முனைகளிலும் நடந்த சண்டைகளின்போது 332 ஹவுத்திப் போராளிகளும் தளபதிகளும் கொல்லப்பட்டதாக அந்தப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!
அழிக்கப்பட்ட உபகரணங்கள்
56 இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அழிக்கப்பட்டன என்றும் செயலிழக்கச் செய்யப்பட்டன எனவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

தைஸ் நகரில் சண்டை தொடர்ந்துகொண்டிருக்க, மோதலின் புதிய மையப்புள்ளியாக மாறியுள்ள அல்-ஜாவ்ஃப் மாகாணத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து பொறியியல் குழுக்கள் கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |