வவுனியா - மன்னார் மாவட்டங்களில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் இவ்விரு மாவட்டங்களிலும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
கவனக்குறைவு
அதிக வேகம், கவனக்குறைவு, வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுதல் மற்றும் வீதியில் செல்லும் பயணிகளின் கவனமின்மையே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இவ்வாறு அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த வீதிப் பயன்பாட்டாளர்கள் உடனடியாகக் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |