தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!
முன்னாள் போராளிகள் உட்பட தமிழர் பிரதேசம் முழுவதும் எப்போதும் உளவு துறையின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தீபன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தற்போதைய இலங்கை அசராங்கத்தின் கீழ் அண்மையில் தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி உட்பட ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் தொடர் கண்காணிப்பிலேயே உள்ளனர்.
இந்தநிலையில், கிருஷ்ணகுமார் கந்தசாமி விடுவிக்கப்பட்டு இருந்தாலும் அவர் அவர் மீதான அரச தரப்பு கண்காணிப்பு என்பது தொடர்ச்சியாக கட்டயாம் இருக்கும்.
அதாவது, தமிழர் பிரதேசம் என்பது செயற்கைக்கோள் போல கண்காணிக்கப்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள தமிழர்கள், நாடுகடத்தல் விவகாரம் தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் நிலை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இந்த நேர்காணல்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |