காசாவில் இஸ்ரேல் தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவின் சவாய்தா நகரில் நேற்றையதினம் (07.11.2024) இஸ்ரேல் இராணுவம் மூன்று ஏவகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓராண்டைக் கடந்துள்ளது.
மனிதாபிமான அடிப்படை
இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகியுள்ள நிலையில் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், காசாவில் சவாய்தா நகரி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |